• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

களைகட்டும் பிக்பாஸ் சீசன் 6.. யார் அந்த பிரபலங்கள்..??

Byகாயத்ரி

Sep 28, 2022

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகபோவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவரும். அதன்படி, இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. நடன இயக்குநர் ராபர்ட், சீரியல் நடிகை ரச்சிதா, நடிகை விசித்ரா, நடிகை ரோஷினி, தொகுப்பாளினி டிடி,நடிகை கிரண், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, பாடகி ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை தான்.. பொறுத்திருந்து பார்ப்போம் கச்சேரியை…!!