

ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் சமீபத்தில் மீஷோ என்னும் ஷாப்பிங் வலைத்தளத்தில் மடிக்கணினி ஆர்டெர் செய்ததற்கு, பதிலாக சோப்புக்கம்பிகள் அனுப்பப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் வாடிக்கையாளர்.
அந்த வகையில் தற்போது, அதே ஷாப்பிங் தளத்திலிருந்து பீகாரை சேர்ந்த ஒருவர் தான் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவுக்கு பதிலாக 1 கிலோ உருளைக்கிழங்கை அனுப்பியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் மக்களிடம் இருக்கும் நம்பகத்தன்மையை ஆன்லைன் ஷாப்பிங் ஆப்கள் இழந்து வருகிறது. அதுபோக மக்களும் எச்சரிக்கையுடன் இதை கையாள்வதும் நல்லது.