• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மணமகன் தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் – கிராம பஞ்சாயத்தார்கள்

ByM.I.MOHAMMED FAROOK

May 9, 2025

காரைக்கால அருகே காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் திருமணத்தின் போது, மணமகன் தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று கிராம பஞ்சாயத்தார்கள் முடிவு எடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாவில் மணமகன்கள் முடிவெட்டாமலும், முகச்சவரம் செய்யாமலும் தாடியுடன் கலந்து கொள்கின்றனர். இது நமது தமிழர்களின் பண்பாடாக தெரியவில்லை. இதில் நமது பாரம்பரிய பண்பாட்டின்படி, திருமணத்தின் போது தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே நமது பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தார்கள், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மணமகன் திருமணத்தின்போது, தாடி வைத்து இருந்தால் அந்த திருமண விழாவில் கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளனர்.