• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி மாலிக்

ByA.Tamilselvan

Jun 11, 2023

பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேட்டி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
இது தொடர்பாக சாக்ஷி மாலிக் கூறும்போது…பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. – நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.