• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் அனுப்பலாம்…

Byகாயத்ரி

Jul 19, 2022

கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கிகள் மூலம் மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்தவகையில் ஜிபே, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை தற்போது உள்ளது.
அந்த வகையில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலம் பணம் அனுப்பலாம் வரும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பர்சேஸ் செய்யும் பொருட்களுக்கு நேரடி மெசேஜ் மூலம் கட்டணம் செலுத்தும் புதிய அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.