
தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று தனது கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ” நானும் என் கணவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இரண்டு பேரின் விருப்பத்தின்படி தான் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் மேஜர், என்னை கட்டாயப்படுத்தி யாரும் திருமணம் செய்து வைக்கவில்லை. நான் மருத்துவம் படித்துள்ளேன், எனது கணவர் டிம்ளோமோ படித்துள்ளார்.
எனது கணவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தமிழ்நாடு போலீஸ் எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அமைச்சரின் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை கூறப்படவில்லை. இவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் திருமணம் செய்ய விரும்பி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். ஆகஸ்ட் 18-ம் தேதி இவருவரும் மும்பையில் தஞ்சமடைந்தனர்.
அந்த சமயத்தில் சேகர்பாபு தனது மகளின் காதலன் மீது எப்ஐஆர் பதிவு செய்தார். பின்பு மகளை சென்னைக்கு அழைத்து வந்து வீட்டில் வைத்து இருந்தார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
