• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்”..,

BySeenu

Aug 26, 2026

​ கோவை, எல் அண்ட் டி பைபாஸ் சாலை பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கோவை எல் & டி பைபாஸ் சாலையின் பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவு வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த நேரத்தில், லாரி ஒன்று வழக்கமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து முற்றிலும் உருக்குலைந்தது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
​அங்கு இருந்தவர்கள் உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதும் அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

​இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமா ? அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை இயக்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்ததா ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.