உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.
இதனிடையே, உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மீது இன்னும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரால் சர்வதேச பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரஷ்யாவில் வர்த்தகம் செய்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் பின்வாங்கியுள்ளனர். போக்குவரத்து பிரச்னையும் இருப்பதால் ரஷ்யா எண்ணெய் விற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதியில் 70% முடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே மாத விநியோகத்திற்கான பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.13 டாலராக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை இந்த உயரத்தை தொடுவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 10.5 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விற்பனை செய்தது. ரஷ்யாவில் எண்ணெய் விலைகள் உயர்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் பெரும் முடக்கத்தை எதிர்கொள்கின்றனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரால் ஒன்றுக்கு 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ஒருமித்த முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
- மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் […]
- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]