• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உங்கள நம்பி ஒண்ணும் நாங்க இல்ல.. பாமகவை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ!

By

Sep 15, 2021

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதற்கு பாஜவின் அமித்ஷா, இந்தி மொழியை தொடர்ந்து புகழ்வதும், தமிழகத்துக்கு எதிரான பல்வேறு பாஜ நடவடிக்கைகளை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்காததாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, ‘கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்; தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே, அவர்கள் வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை’ என பாமகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.