• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்- சசிகலா பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுரு கனை ஆதரித்து கட்சி நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சசிகலா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட மன்னர் ஆட்சி திமுக வை வீட்டுக்கு அனுப்ப இந்த தேர்தலில் களம் காண்கிறோம். இது மக்களுக்கான இயக்கமாக என்றும் இருக்கும். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் முதல்வராக இருந்தபோது ஏழை எளிய மக்களுக்காக ஆடு, மாடு மணிக்கணினி சீருடை என்று ஏராளமான திட்டங்கள் செய்தார்கள் அதற்கெல்லாம் அவர்கள் கடன் வாங்கவில்லை. ஆனால் திமுக இன்று எதுவும் செய்யாமல் ரூ12 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. தி.மு.க 2021 தேர்தல் அறிக்கையில் சொல்லி எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க மானியம் தருவதாக கூறியதை தரவில்லை. கூட்டுறவு மானியம் தருவதாக கூறி அதுவும் செய்யவில்லை. எல்லா மாவட்டத்திலும் உயர் மட்ட பாலம் கட்டித் தருவதாக கூறி அதுவும் கட்டவில்லை.நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ 2,500 உயர்த்தி தருவதாக கூறி கொடுக்கவில்லை. நீர்நிலைகளை சீரமைத்து பாசன வசதிக்கு கால்வாய் வெட்டி தருவதாக கூறி அதுவும் செய்யவில்லை. ஆனால் தற்போது சொத்து வரி வீட்டு வரியை அதிகமாக்கி விட்டார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தவர்கள் தற்போது 2000 தருவதாக கூறுகிறார்கள் இது சாத்தியமாகுமா. இது எல்லாம் ஒவ்வொரு வாக்காளர்களின் தலையில் தான் கடனாக விழுகிறது.திமுக ஆட்சியில் குடிதண்ணீரில் கழிவு நீர் கலக்கிறது . ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை. கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவில்லை. நான் யாரையும் நம்பவில்லை தமிழ்நாட்டு மக்களை நம்பி உள்ளேன். நான் ஜெயலலிதாவுடன் இருந்த போது மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துக் கொண்டே தான் இருப்பேன். அதைப்பற்றி தான் இருவரும் பேசுவோம். நிச்சயமாக நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

மக்களோடு இருக்கும் வேட்பாளருக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளேன். யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் அது அவர்கள் பணம் இல்ல. இதிலிருந்து மீண்டு வர தென்னை மர சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இதை கட்டாயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவர் அவர் பேசினார்.