• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிமுக தீவிர ஓட்டு வேட்டை..,

Byசோலைஆதி

Apr 8, 2026

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி,சின்ன இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகிகள் அசோக்குமார் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வழிநெடுகை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன்,மாவட்ட நிர்வாகிகள் கேபிள்மணி, ஜெயபிரகாஷ், சோலைகண்ணன் பேட்டை மாரி, சுரேஷ் துணைச்செயலாளர் தியாகு, இரும்பாடி நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், பாலகிருஷ்ணபுரம் நிர்வாகிகள் பழனியாண்டி, கருப்பையா உள்பட அதிமுக , பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.