• Thu. Apr 25th, 2024

செவ்வாய் கிரகத்தின் கீழ் தண்ணீர்.. சீன விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்…

Byகாயத்ரி

Sep 29, 2022

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீப காலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தியான்வென் – 1 என்ற விண்கலத்தை அனுப்பிய சீன விண்வெளி ஆய்வு மையம் அதன் மூலம் செவ்வாய் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல கோடி ஆண்டுகள் முன்னதாக தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தகவல் செவ்வாய் ஆராய்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *