• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!

BySeenu

Jun 17, 2025

கேரளா சிறுவாணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது. ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி சரிந்தது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மொத்த உயரம் 50 அடி பாதுகாப்பு காரணங்களை கூறி 44.61 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும் என கேரளா நீர்ப்பாசன துறை கூறுகிறது. நேற்றைய தினம் நீர்மட்டம் 43 அடியாக இருந்த போது மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றியதால் ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் குறைந்து, 43.13 அடியில் இருந்து 41.33 சரிந்து உள்ளது. இதனால் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பள்ளத் தாக்கில் சிறுவாணி ஆறு உற்பத்தியாகும். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் பெய்யும் மழை நீர் சிறுவாணி அணையில் தேக்கப்படுகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதால் அணையை பராமரிப்பதற்கான செலவை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று உள்ளது. பராமரிக்கும் பொறுப்பை கேரளா நீர்ப்பாசன துறை ஏற்று இருக்கிறது. இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 863.50 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அதிகபட்ச உயரம் 878.50 மீட்டர். 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. 650 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கலாம்.

இதன்படி 15 மீட்டர் உயரம் கொண்டது. 1.55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழையை குடைந்து எவ்வித உந்து சக்தியும் இல்லாமல் புவி ஈர்ப்பு விசையில் அடிவாரத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது இதன் சிறப்பம்சம். அணையின் மொத்த உயரம் 50 அடியாக இருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களை கூறி 5 அடிக்கு குறைவாக நீர்த் தேக்கம் அம்மாநில நீர் பாசனத் துறை அறிவுறுத்து உள்ளது. இதன்படி 45 அடிக்கு தேக்கப்பட்டு வந்தது.

சமீப காலமாக 44.61 அடிக்கு நீர்த்தேக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அணைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி 124 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து 43.13 அடியாக நீர்மட்டம் அதிகரித்தது. 9.97 கோடி லிட்டர் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒப்பந்தப்படி 10.1 கோடி லிட்டர் தண்ணீர் பெரும் வகையில் வால்வுகளை திறக்க கேரளா அரசிடம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரி இருந்தனர்.

ஆனால் கிளை ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு மற்றும் மழைப்பொழிவு காரணம் காட்டி, விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் திறந்து விடும் துளையில் உள்ள மதகை 50 சென்டி மீட்டர் உயரத்துக்கும் (வழக்கமாக ஐந்து சென்டி மீட்டர் மட்டுமே திறந்து இருக்கும்) நேற்று தண்ணீரை வெளியேற்றினர்.

இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி சரிந்து தற்பொழுது இன்று காலை நிலவரப்படி 41.33 அடியாக சரிந்து உள்ளது. இது கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் கேரளா நீர்ப்பாசனத் துறையினரிடம், தமிழக அதிகாரிகள் பேசி திறக்கப்பட்ட மதகுகளை மூட வைத்து உள்ளனர். இது குறித்து தமிழக அதிகாரிகளிடம் கேட்டபோது, மழை குறைந்ததின் காரணமாக மதகுகள் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.