நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ.போன்ற போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக ஆகாஷ் கல்வி நிறுவனங்கள் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் ஆகாஷ் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவ, மாணவிகள் தரவரிசையில் முன்னனி இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.
இதில் கோவையை சேர்ந்த மாணவர்கள் மதுநந்தன் ஆர் மற்றும் கவின், ஆகியோர் நீட் தேர்வில் தேசிய அளவில் 619 மற்றும் 1996 என மிகச் சிறந்த தரவரிசையுடன் முன்னணி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்நிலையில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஆகாஷ் தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இதில் மாணவ,மாணவிகளுக்கு மலர் மாலைகள் அணவித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆகாஷ் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து, ஆகாஷ் நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைமை நிர்வாகியான தீராஜ் குமார் மிஸ்ரா,கூறுகையில், நீட் 2025 தேர்வில் எங்கள் மாணவர்கள் பெற்றுள்ள அபூர்வ வெற்றிக்கு நாம் பெருமைப்படுகிறோம். நாடு முழுவதும் இருந்து மாணவர்கள்
பங்கேற்கும் இந்த தேர்வில் இந்த அளவிலான மதிப்பெண்கள் பெறுவது ஒரு சாதனையே. இந்த வெற்றி, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் மனபூர்வ முயற்சிகளை மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்களின் ஆதரவும், எங்கள் கல்வி குழுவின் முழுமையான ஈடுபாடும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.