• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தவெக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

ByRadhakrishnan Thangaraj

Apr 27, 2025

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்திற்கு சாலையை கடந்து செல்லும் போது, தாகம் தீர்க்கும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி தமிழக வெற்றி கழகம் சார்பாக, விருதுநகர் தென்மேற்கு மாவட்ட செயலாளர் Dr. ஜெகதீஸ்வரி தலைமையில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை விருதுநகர் தென்மேற்கு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் மூர்த்தி, இணை அமைப்பாளர் எல்.எஸ்.பாண்டி பொருளாளர் குருராஜ் ஆய்வு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களின் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.