மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு ஒரு நபர் கள்ள வாக்காக செலுத்திவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்களை என அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்
