• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாலைகளை சீரமைக்க கோரி நடைபயணம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைகளை சீரமைக்க கோரி நடைபயணம் மற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் நடுவட்டம் முதல் தாளூர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக செப்பனிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக தேவாலா முதல் கூடலூர் வரை நடைபயணமானது நடத்தப்பட்டது. இதனை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இன் மாவட்ட செயலாளர் தோழர் வி ஏ பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராசி ரவிக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சன் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் வர்கீஸ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் நௌபல் சிறப்புரையாற்றினார் . முடிவில் தோழர் நவநீதன் நன்றி உரையாற்றினார்.
நடைபயணமானது நாகாணி செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வமாக வரும் 30ஆம் தேதிக்கு முன் சாலை பணி தொடங்கும் என்பதை உறுதி அளித்ததன் காரணமாக தற்காலிகமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நடைபயணமானது நாடுகாணியுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.