• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

உதகையில் நிலவும் பனி மூட்டத்துடன்
கூடிய இதமான காலநிலை…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதலே பனி மூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. பனி மூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. விடுமுறையான நாளான இன்று அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ளனர்.
தற்போது பனி மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருவதால், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெம்மை ஆடைகளை அணிந்து பூங்காவை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து செல்வதோடு, இதமான காலநிலையை அனுபவித்து செல்கின்றனர்.