• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வ.உ.சி. சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மரியாதை!

By

Sep 5, 2021 , ,

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருத்தங்கல்லில் உள்ள வ.உ.சி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ். ஆர். ராஜவர்மன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சிவகாசி நகரக் கழகச் செயலாளர் அசன்பதூரூதீன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சீனிவாசப்பெருமாள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.