ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிச.14-ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவவீரர்கள், பட்டாலியன் போலீசார் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னதாக தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்த நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்களர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தல் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி .8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம் ஈரோடு கிழக்குத தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது தெரிய வரும்.