• Sat. Oct 5th, 2024

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

Byமதி

Nov 19, 2021

வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிசெய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது. தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.


அந்த வகையில், நடப்பாண்டுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனிக்கிழமை மற்றும் ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *