• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மிஷ்கின் இயக்கத்தில் விஜேஎஸ்?

நடிகர் விஜய்சேதுபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்த படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மிஸ்கின் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு அக்சன் த்ரில்லர் கதையை மையமாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.