

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு நடந்த திறந்த வெளி அருங்காட்சியகத்தில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு தடை தொல்லியல் துறை அறிவிப்புசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 10 அகழாய்வு இடங்களையும்
17 கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் ஐயாயிரத்து 914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 23ஆம் தேதி அறிவித்தார்,

இதனைங தொடர்ந்து திறந்த வெளி அருங்காட்சியம் அமைப்பதற்காக கடந்த மாதம் 16ம் தேதி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பார்வையாளர்களின் தொடர் கோரிக்கைக்ககள் வைத்து வந்த நிலையில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களை மட்டும் தற்காலிகமாக திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக தினந்தோறும் பார்வையாளர்கள் பார்வையிட்டு வந்த நிலையில்,

தற்போது திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கும் கட்டுமான பணிகள் நடந்து வருவதால். பார்வையாளர்கள் வந்தால் இடையூறாக இருக்கும் காரணத்தினால் பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி அருங்காட்சியம் பணியில் முடிந்த பின்பு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

