• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சலாம் மங்களராத்தி சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் சலாம் மங்களராத்தி என அழைக்கப்படும் சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீ மூகாம்பிகை கோவில் கமிட்டிக்கு அளித்துள்ள மனுவில் இந்த சடங்கு ஒரு பிரதோஷ பூஜை ஆனால் 18ம் நூற்றாண்டில் இருந்து சலாம் மங்களராத்தி என்று அழைக்கப்படுகிறது .இது அடிமை தனத்தின் அடையாளம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் ஷரன் பம்ப் வெல் கூறியுள்ளார்.