நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .104.43- க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .94.47- க்கும் விற்பனை செய்யப்பட்டது .
இந்நிலையில் , இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது . டீசல் விலை லிட்டருக்கு 0.53 காசுகள் உயர்ந்துள்ளது .
அதன்படி , சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .104.90- க்கும் , ஒரு லிட்டர் டீசல் ரூ .95.00- க்கும் விற்பனை செய்யப்படுகிறது . தொடர்ந்து நான்கு நாட்களாக விலையேற்றம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ..3.70 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.