• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு -குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ByA.Tamilselvan

May 23, 2022

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடிதாக்கல் செய்தது .
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேருக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலும் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு எதிராக விருதுநகர் இளஞ் சிறார் நீதி குழுமத்திலும் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது .சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி சுமார் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார் .முன்னதாக கைது செய்யபட்ட நபர்கள் அவர்களின் பெற்றோர், உறவினர் நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெறும் .குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பாதிக்கப்பட்டட நபர், சாட்சியங்கள் உள்ளிட்ட நபர்களிடம் நீதிமன்ற விசாரணை நடத்தப்படும்