• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியகொடி வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Aug 15, 2022

75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியக்கொடி வீடியோ வைரல் ஆகியுள்ளது.
நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய,மாநில அரசுகள் பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இந்திய தூதரகம் சார்பில் வானில் பாரசூட் மூலம் இந்தியாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. ஏற்கனவே பூமியில் இருந்து 30 கிமீ உயரத்தில் தேசியகொடி ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா பறக்கவிட்டது.இதன் தொடர்சியாக வானில் பாராசூட் மூலம் தேசியக்கொடி பறக்கவிட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.