தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றிய இந்துமுன்னணி சார்பாக 43-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 175-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்காக விநாயகர் திருமேனிகளை வடிவமைக்கும் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து உயர்தர மூலப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு, சின்னமனூர் பாஸ்கரன் ரைஸ்மில் வளாகத்தில் சிற்பிகள் சரவணன், சக்தி மற்றும் சேகர் ஆகியோரால் நேர்த்தியான கலைநயத்துடன் திருமேனிகள் செய்யப்படவுள்ளன.
இந்த தயாரிப்பு மற்றும் பூர்வாங்க பணிகள் அனைத்தும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி தெற்கு மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், நகர தலைவர் சுருளிமுத்து, நகர துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் நகர பொறுப்பாளர் யுவராஜ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் திறம்பட நடைபெற்று வருகின்றனர்.




