• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ‘சீனா’ பெயர்: பயணிகள் குழப்பம்”..,

​தேனி பேருந்து நிலையத்தில் நிற்கும் அரசு பேருந்தின் மின்சார இலக்குப்பலகையில் ‘China’ என ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பயணிகளிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் குழப்பத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனியிலிருந்து பெரியகுளம் மற்றும் மதுரை செல்லும் அரசு பேருந்தில், வழித்தட பெயரை துல்லியமாகக் காட்ட வேண்டிய LED டிஜிட்டல் பலகையில் ‘China’ என்ற பெயர் வெளிவந்துள்ளது. வழக்கமாக இத்தகைய மின்சார பலகைகள் மென்பொருள் மற்றும் மின்சுற்று தொழில்நுட்பம் மூலம் இயங்குபவையாகும். அவற்றில் ஏற்படும் மென்பொருள் பிழைகள் அல்லது சரியான பராமரிப்பின்மை காரணமாகவே இதுபோன்ற முறையற்ற சொற்கள் திரையில் தோன்றுகின்றன.

எனினும், இத்தகைய தொழில்நுட்ப கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்யாமல், பொதுவெளியில் பேருந்துகளை இயக்குவது அரசுப் போக்குவரத்து துறையின் செயல்திறன் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து சீனாவுக்கு பேருந்து இயக்கப்படுகிறதா என்ற நக்கலான கேள்விகளோடு சமூக ஆர்வலர்களும், பயணிகளும் இதை கடுமையாக விவாதித்து வருகின்றனர்.

இப்பிரச்சனை தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு பணிமனைகளுக்கு சொந்தமான பேருந்துகளிலும் அவ்வப்போது எதிரொலித்து வருகிறது. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனை மேலாளர்களுக்கும் தெளிவான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

பழுதடைந்த மற்றும் பிழையான மென்பொருள் பலகைகளை உடனடியாக நீக்கம் செய்து, முறையான புதிய டிஜிட்டல் பலகைகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் குழப்பங்களை தவிர்ப்பதோடு, அரசு துறை மீதான நம்பகத்தன்மையையும் காக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.