• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு..,

ByVasanth Siddharthan

Jun 18, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதில் முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், வல்லடியார், கிராம எல்லை தெய்வங்களான கவர நாயக்கர் சாமி, விநாயகர், தெற்கு அய்யனார், கன்னிமார், மாட்டுக்கார சாமி, அமராவதி, பச்சைமலை சாமி, மல்லாண்டவர் ஆகிய தெய்வங்கள் உள்ளது.

இக்கோவிலில்  நடைபெறும் புரவி எடுப்பு திருவிழா தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியம் மிக்க இக்கோவில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களால் பல நூறு ஆண்டுகளாக நிர்வகித்து வரும் நிலையில் சில மாதங்களாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் கோவிலை அறநிலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அக்கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 500க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் நத்தம் கைலாசநாதர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் நத்தம் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வத்திடம் கோவிலை இந்து அறநிலையத்துறையில் இணைக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

கைலாசநாதர் கோவில் வளாகத்தில் திடீரென 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.