• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பூமி பூஜை போட வந்த அமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை …

ByK Kaliraj

Feb 3, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பூஜையை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் அடிக்கல் நாட்டு விழாவின்போது அதே பஞ்சாயத்திற்கு உட்பட்ட மற்றொரு கிராமமான சின்னத்தம்பியாபுரம் கிராம பொதுமக்கள் பலர் அமைச்சரிடம் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் சின்னதம்பியாபுரம் கிராமத்தில் தண்ணீர் வசதி வாருகால் வசதி பேர்வர் பிளாக் அமைக்கும் பணியானது ஒரு குறிப்பிட்ட தெருவினை மட்டும் புறக்கணிக்கப்பட்டதாகவும் நீர்த்தேக்கத்தொட்டி மயானக்கரை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி எதுவும் இல்லை என சின்னத்தம்பியாபுரம் கிராம பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்க வந்த நிலையில் அவர்களை கண்டு கொள்ளாமல் அமைச்சர் காரில் ஏறி சென்றுள்ளார்.

இதைக்கண்டு குழம்பிய சின்னத்தம்பியாபுரம் கிராம பொதுமக்கள் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் தங்கள் ஊர் கிராம மக்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம் என புலம்பியவாறு அப்பகுதி மக்கள் நின்றிருந்தனர். உடனடியாக அப்பகுதி சேர்த்த கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.