• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள்

ByKalamegam Viswanathan

Nov 22, 2024

மதுரை பெருங்குடியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பெருங்குடி கிராம மக்கள் ஈடுபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கிராமம் அமைந்துள்ளது. பெருங்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகிறது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

பெருங்குடி வழியாக நிலையூர், சம்பகுளம், திருப்பரங்குன்றம், கைத்தறி நகர், பரம்புபட்டி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. பெருங்குடி கிராமத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக நெடுஞ் சாலைத்துறையினரால் சாலை சீரமைக்கப்படாததால் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமான சாலையாக மாறியுள்ளது.

பெருங்குடி கிராம முக்கிய சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பெருங்குடி கிராமத்தில் இருந்து தங்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் விபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுக்குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை பெருங்குடி கிராமத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட கிராம மக்கள் விநோதமான குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு வருடங்களாகியும் சரி செய்யப்படாத சாலையினால் கர்ப்பிணி பெண்கள்,முதியவர்கள் மற்றும் குழந்தைகள் ஏற்படும் விபத்துகளால் மருத்துவமனைக்கு எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழக அரசு உடனே இதைக்கவனத்தில் கொண்டு இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதே பெருங்குடி கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.