• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தீப திருவிழா டிசம்பர் 05-ந்தேதி தொடக்கம்.

ByKalamegam Viswanathan

Nov 22, 2024

திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா வரும் 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ஆம் தேதி மலை மீது மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா டிசம்பர் 05-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான 5 -தேதி பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட திருக்கோயில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்க குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12 -ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6:30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக -13ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், திருப்பரங்குன்றம் மலை உச்சி பிள்ளையார் கோயில் மேல் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது.

இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14.12.24 அன்று காலை பெரிய ரத வீதி, கீழ ரதவீதி, மேல ரத வீதி, சன்னதி தெரு வழியாக தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவின் நிறைவாக வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.