• Fri. Dec 13th, 2024

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ByKalamegam Viswanathan

Nov 22, 2024

மதுரை “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள்“
மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம். வாக்களிக்க தயார் என்போம். வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்போம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர், ஆத்திக்குளம் பகுதியில் தொடங்கி வைத்தார். இப்பேரணி ஆத்திக்குளத்தில் தொடங்கி வைக்கப்பட்டு ஜவஹர்புரம், பாத்திமா பள்ளி அருகில் திரும்ப வந்தடைந்தது. இப்பேரணியில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 23.11.2024 சனிக்கிழமை மற்றும் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் புதிய வாக்காளர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், பெயரை நீக்குதல், வாக்காளர் பெயரை சேர்க்க ஆட்சேபணை தெரிவித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பான சேவைகளுக்கு உரிய படிவங்கள் வழங்குவது, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் உடனே புதிய வாக்காளராக பெயர் பதிவு செய்ய படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாக்காளர் உதவி மையச் செயலி மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் உதவி மையம் எண்.1950 தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நாளை 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் இந்த அரிய வாய்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், பொதுமக்கள் சிறப்பு முகாமில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள வாக்குச்சாவடியில் விண்ணப்பிக்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.
இந்நிகழ்வில், உதவி ஆணையாளர் (வடக்கு) கோபு, உதவிப் பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.