• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பறங்குன்றம்-பெருங்குடிஊராட்சியில் கிராமசபை கூட்டம்

ByKalamegam Viswanathan

May 2, 2023

மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் ஒன்றியம் பெருங்குடிஊராட்சியில் மன்ற தலைவர் பத்மா முருகேசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் என்ற நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் ஒன்றியம் பெருங்குடிஊராட்சியில் மன்ற தலைவர் பத்மா முருகேசன் தலைமையில் துணனத் தலைவர் விஜயலெட்சுமி ராஜேந்திரன் , ஊராட்சி செயலர் வேல்முருகன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், செவிலியர்கள், சத்துணவு மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமசபை கூட்டம் அமுதம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தூய்மை பணிகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.