• Fri. Apr 18th, 2025

கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்..,

ByR. Vijay

Apr 9, 2025

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஹமித்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சோழன் கலந்து கொண்டு பேசினார்.

கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 33 – ஐ திரும்ப பெற்று கருணை அடிப்படையில் மீண்டும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் , முன்னாள் மாநில துணை தலைவர் முருகையன் ஆகியோர் உள்பட வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.