• Mon. Apr 28th, 2025

சீமானை பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது..,

ByR. Vijay

Apr 9, 2025

நாகையில் வருகின்ற 15 ம் தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 வது தேசிய மாநாடு நடைப்பெற உள்ளது. 15, 16, 17 தேதிகளில் மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த மாநாடில் இறுதி நிகழ்வாக 17 ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைப்பெற உள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நாகையில் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்த அவர் மத்திய அரசு மூன்று மசோதாக்களை விவசாயிகளுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இயற்றி உள்ளது என சாடிய அவர் எதிர் கட்சிகளின் எதிர்ப்பையும், விவசாயிகளின் எதிர்ப்பையும் மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் கோவில் நிலங்கள், மடத்து நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும், கோவில் நிலங்களில் குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்க உள்ளோம் என கூறிய அவர் இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, தமிழக அமைச்சர்கள. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேரளா அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தமிழக ஆளூநர்க்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறியவர் அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நிலையில் அதிமுக மட்டும் அமையாகி விழி பிதுங்கி நிற்கிறது என்றவர் அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிமுக முயற்சி எடுக்கிறதோ இல்லையோ பாஜக அந்த முயற்சியை எடுத்து வருகிறது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர் சீமானை திமுக ஒரு போதும் மிரட்டவில்லை என்றவர் தமிழகத்தில் பாஜக காலூன்ற சீமானை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக கூறியவர் பாஜகவோடு பகை ஏற்பட்டு விடும் என்பதால் நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பதாக தெரிவித்தார்.