• Fri. Apr 18th, 2025

ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்..,

ByR. Vijay

Apr 9, 2025

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, நாகையில் திமுக வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்படுவதாக கோரி ஆளுநர் ஆ. என். ரவிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.