• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

இறுதிக்கட்டப் படப்படிப்பில் விக்ரமின் ‘கோப்ரா’

Byமதி

Nov 12, 2021

விக்ரமின் ‘கோப்ரா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

’டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படம் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’. விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார், விக்ரமுக்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார்

சென்னை மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங்கிற்க்காக மீண்டும் ரஷ்யாவுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. 15 நாட்கள் நடக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதனிடையே, இர்பான் பதான் டி20 கிரிக்கெட்டில் பிசியாகவும், விக்ரம் ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் பிசியாக இருந்ததாலும் காத்திருந்திருக்கிறது படக்குழு.