நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நேரடியாக தனது கருத்துக்களை, புகைப்படங்களை வெளியிடுவது இல்லை அஜீத்குமார். ஆனால் அவர் சம்பந்தமான புகைப்படங்கள், அறிக்கைகள் அதிகாரபூர்வமாக அவரது பத்திரிகை தொடர்பாளர் மூலம் அல்லது நண்பர்கள் வாயிலாக கசியவிடப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அஜீத்குமார்.
அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் பேசும் பொருளானதற்கு காரணம், அவர் நடிக்கவுள்ள 61வது படத்தின் கெட்டப்.. இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கஸ்துாரி, ‘தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும், மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில், தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம், சுத்தி போடுங்க’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் இயல்பாக இல்லாமல் நரை விழுந்த முடிகளுக்கு கறுப்பு சாயம் பூசி நடமாடுவதையும், செயற்கையான விக் வைத்துக் கொண்டுவரும் தலைவர்களையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சிறிதுகாலமாக மறக்கப்பட்டிருந்த நடிகை கஸ்தூரி வாண்டடாக வம்பு சண்டைக்கு தயாராகிவிட்டார் போல் தெரிகிறது!!