• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அஜித்துடன் போட்டி போடும் விஜயின் அப்பா

ByA.Tamilselvan

Nov 2, 2022

தமிழ் சினிமாவில் அமாரவதி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அஜித். இவர் இதனைத் தொடர்ந்து இதுவரை 60 படங்களில் நடித்திருக்கின்றார். இவரது 61 படமான துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.
நடிப்பைத் தவிர பைக் ரேசிங்கிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பல்வேறு இடங்களுக்கும் பைக்கில் சென்று வருகின்றார்.சமீபத்தில் இமயமலை பகுதியில் அஜித் பைக் பயணம் செல்லும் படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.அதே போல அஜித் பைக்கில் உலகம் சுற்றும் கனவை இப்போது நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.திரையுலகில் அஜித்துக்கு போட்டியாளர் என்றால் அது விஜிய்தான் விஜய்யின் தந்தை SAC இமாலயாவுக்கு சென்றுள்ளார், அவர் பைக்கில் சூப்பரான லுக்கில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்ததும் ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.