• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு..,

ByKalamegam Viswanathan

Jan 10, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.

அந்த மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கோவில் உள்துறை நிர்வாக அதிகாரி சத்திய சீலன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.