• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்! 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

ByA.Tamilselvan

Nov 2, 2022

2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது முதல் முறையாக இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து உள்ளார். தற்காலிகமாக சூர்யா 42 என அழைக்கப்படும் இந்த படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வரும் சூர்யா 42 ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.ஹிந்தி நடிகை திஷா பாட்னி இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.
சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்டர் வெளியாகி தற்போதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை யூட்யூபில் கடந்துள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் மொத்தம் 10 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.