புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட எண்ணை ஊராட்சி மெய்க்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.ரெங்கசாமி அவர்களின் சகோதரர் கணேசன் மனைவி சத்யா (28) கடந்த வாரம் சாலை விபத்தொன்றில் மூளைச் சாவு அடைந்த வேதனைமிகுந்த செய்தியறிந்து, அவரது இல்லம் சென்று புதுக்கோட்டை
வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான, டாக்டர் சி விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் விராலிமலை தொகுதிக்குட்பட்ட எண்ணை ஊராட்சி மெய்க்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.ரெங்கசாமி அவர்களின் சகோதரர் கணேசன் மனைவி சத்யா (28) கடந்த வாரம் சாலை விபத்தொன்றில் மூளைச் சாவு அடைந்தார் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது இதனை யடுத்து அரசு சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு சென்ற டாக்டர். சி. விஜயபாஸ்கர்
ஈடுசெய்ய முடியாத இழப்பில் குடும்பத்தினர் தவித்த நிலையிலும், சமூக அக்கறையோடும், மனித நேயத்தோடும் தாமாக முன்வந்து அவரது கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர்.

மறைந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, விலை மதிப்பற்ற பிற உயிர்களை காக்க உதவிய, கழகக் குடும்பத்தாரின் தூய உள்ளத்தை போற்றி அவரது குடும்பத்தாருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்ததோடு உள்ளம் கடந்த நன்றியையும் மரியாதையும் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)