• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நான் சொன்னதும் விஜய் ஷாக் ஆகிட்டார்! – அமீர்

தமிழ் சினிமாவில் இப்போது உள்ள காலநிலையில் இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில இயக்குனர் அமீரும் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து அதில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இப்பொழுது பல படங்களில் ஹீரோவாகவும் முக்கிய வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அமீர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் சந்தனத்தேவன் மற்றும் இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் விஜய் உடன் பணியாற்ற இருந்த சுவாரஸ்ய நிகழ்வை தற்போது பகிர்ந்துள்ளார்.

2009ல் விஜய்யை சந்தித்து கதை கூறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது விஜய்யிடம் இரண்டு கதைகளை அவர் கூறியுள்ளார். இரண்டு கதைகளுமே விஜய்க்கு பிடித்துப்போக இதில் எதை முதலில் செய்யலாம் என விஜய் கேட்டதற்கு அது உங்களுடைய விருப்பம் என அமீர் கூறியுள்ளார். உடனேயே படத்தை பண்ணலாமா இல்ல கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா என விஜய் கேட்டதற்கு..

அதெல்லாம் எந்த அவசரமும் இல்லை என்றாராம் அதற்கு விஜய் அதுவரைக்கும் நீங்க வெயிட் பண்ணுவீங்களா எனக் கேட்டுள்ளார். அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க நான் இன்னும் திரைத் துறையில் தொடர்ச்சியாக மிக வேகமாக பயணித்தாலே நான்கு அல்லது ஐந்து படங்களுக்கு மேல் பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறியதைக் கேட்ட விஜய் அதிர்ச்சியாகி என்னங்க சொல்றிங்க எனக் கேட்டுள்ளார். அந்த சிறிய இடைவேளை எப்பொழுது நீண்ட இடைவெளியாகி அமீர் விஜய் இணையும் படம் இன்று வரை உருவாகாமல் உள்ளது.