• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் விஜய் வசந்த் சிறப்புரை..,

குமரி, நெல்லை மாவட்டங்களின் எல்லையான ஆரல்வாய்மொழிக்கு அடுத்துள்ள வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தில் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியானர்.

ஜாய் பல்கலைக்கழகத்தில் சமூகத்தின் அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டில் மாணவர்களின் ஈடுபாடு (JU SEEDS) குறித்து  மாணவர் ஆளுமையின் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா இன்று (08-10-2025) நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு மாணவர்களிடையே ஆளுமையின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரையாற்றினார். 


மேலும் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) முத்துக்குமார், வள்ளியூர் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஆகியோர் கிராம மேம்பாட்டு திட்டங்களுக்கும், செயல்பாட்டுகளும் பற்றி பேசினர். இந்த நிகழ்வில் ஜாய் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் ஜான் டி பிரிட்டோ, seed இயக்குனர் கருப்பையா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஹரீஷ், பேராசிரியர் அனிதா, டாக்டர் மினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.