• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடியை திறந்து வைத்த விஜய்வசந்த் எம்பி..,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி விஜய்வசந்த் எம்பி திறந்து வைத்தார்.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு  சென்னான் விளை பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தனர், கோரிக்கையை ஏற்று அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 13 லட்சம்  ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் பணி முடிந்து இன்று(பெப்ரவரி_22) அதன் திறப்பு விழா நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். 
    
இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், மண்டல தலைவர்கள் சிவபிரபு. தங்கராஜ், 43 வார்டு காங்கிரஸ் தலைவர் வினோ, தேமுதிக தெற்கு பகுதி செயலாளர் கரிகோபல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.