நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் பட வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் பிறந்தநாளில் வெளிவந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் லக் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்திரைப்படத்தில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாரிசு திரைப்படத்தில், ராஷ்மிகா முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் வேறொரு தெலுங்கு நடிகர் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், தற்போது சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்பதால், அவருக்கு பதிலாக எஸ்.ஜே. சூர்யா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யா விஜய்யை வைத்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த குஷி படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.