• Sun. Nov 10th, 2024

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்

ByA.Tamilselvan

Nov 17, 2022

விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் நல்லாயிரும்மா பாடல் தற்போது இணையத்தில் வைரவாகி வருகிறது.
விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நல்லா இரும்மா’ என்ற இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதியுள்ளார். உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *