• Sat. Apr 20th, 2024

அடுத்து அடுத்து வெளிவரும் உலகநாயகனின் படங்கள்

ByA.Tamilselvan

Nov 17, 2022

உலகநாயகன் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வசூலில்சாதனை படைத்தது. அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து அவரின் முக்கிய திரைப்படங்கள் உருவாக இருக்கின்றன.
அதன்படி சமீபத்தில் கமல் – மணிரத்னம் கூட்டணியில் 234-வது திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். ஆனால் அப்போதே கமல் – எச்.வினோத் கூட்டணியின் அறிவிப்பு தான் வர இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்கிடையே தற்போது மீண்டும் கமல் – எச்.வினோத் கூட்டணி திரைப்படத்தின் தகவல்கள் பரவி வருகின்றன.அதன்படி 233-வது திரைப்படத்திற்காக அந்த கூட்டணி அமைய இருப்பதாகவும், 234-வது திரைப்படத்திற்கு முன்பே இப்படத்தை மிக குறுகிய நாட்களில் முடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *